search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎன் நேரு
    X
    கேஎன் நேரு

    தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அதிமுகவை நிராகரிப்போம் பிரசாரம்- கேஎன் நேரு பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    23-ந் தேதி முதல் ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ பிரசாரத்தில் 1,600 கட்சி முன்னணியினர் 10 நாட்கள் ஈடுபட உள்ளதாக கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ‘அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை’ என்ற சிற்றேடை வெளியிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசின் 10 ஆண்டு கால மோசமான ஆட்சியால் தமிழகத்தின் அனைத்து பிரிவு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் துயரம், அதிகரித்து வரும் கடன் சுமை, மோசமடைந்துள்ள சட்டம்-ஒழுங்கு, விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது மற்றும் மாநில அரசின் அதிகாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது என தமிழக அரசின் நிர்வாகம் முடங்கியுள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நேற்று) ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசாரத்தை தொடங்கிவைத்தார். 1,600 கட்சி முன்னணியினர் இதன்படி வருகிற 23-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் அடுத்த 10 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை கூட்டுவார்கள்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு, தமிழக அரசின் தோல்விகள் விளக்கப்படும். பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிரான மக்கள் தீர்மானத்தில் கையொப்பம் பெறப்படும்.

    கிராம சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதற்கு உதவியாக இருக்கும். தமிழக சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200’ என்பது தி.மு.க. கூட்டணியின் இலக்கு. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இருக்காது. எங்களுடைய வாக்கு உறுதியாக பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×