search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு திருப்பூர் மாவட்டமே சான்று- மு.க.ஸ்டாலின்

    கொரோனாவை பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூரில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கொங்கு மண்டலத்தில் பல அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சித் திட்டங்களில் மிகவும் பின்தங்கிவிட்டது.

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு திருப்பூர் மாவட்டமே சான்று. கொரோனாவை பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. ஜிஎஸ்டி வரியால் துணி நூல் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இளைஞர்கள் திருப்பூர் குமரனைப் போல போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தது கலைஞர்தான். திருப்பூர் சுற்றுச்சாலை அமைக்கவும், 5 பாலங்கள் கட்டவும் திட்டம் தீட்டியது திமுக ஆட்சி.

    அதிமுக ஆட்சியில் 3 பாலப்பணிகளையும் நிறுத்தியதால் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

    திமுகவுக்கு யாரும் நாட்டுப் பற்றை கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
    Next Story
    ×