என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
மத்தூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
மத்தூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள கூச்சூரை சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 60). சம்பவத்தன்று அவர் மாடரஅள்ளி ராஜீவ் நகர் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். அவர் முகவரி கேட்பது போல சிந்தாமணியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென்று அவர் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இது குறித்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






