என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை ஆறுகாட்டுத்துறையில் கரையில் நிறுத்தி வைத்திருந்த காட்சி.
    X
    கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை ஆறுகாட்டுத்துறையில் கரையில் நிறுத்தி வைத்திருந்த காட்சி.

    வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்- 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான சிறுதலைக்காடு, கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். 

    இந்த நிலையில் நேற்று முதல் அந்தந்த கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன், சூறைக்காற்று வீசும் என்று மீன்துறையினரும், மீனவ கிராம பஞ்சாயத்தார்களும் அறிவித்தனர். அதன்படி நேற்று 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை ஆறுக்காட்டுத்துறையில் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    Next Story
    ×