என் மலர்
செய்திகள்

கத்திக்குத்து
திருமணமான பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
கோவை அருகே திருமணமான பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர்:
கோவையை அடுத்த போத்தனூர் செட்டிபாளையம் கலைஞர்நகரை சேர்ந்தவர் வீராசாமி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியின் மகளை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வீராசாமி, திருமணமாகி வெளியூருக்கு சென்ற அந்த பெண்ணுக்கு அடிக்கடி காதல் தொல்லை கொடுத்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை, வீராசாமியை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று வீராசாமி, அந்த பெண் வீட்டுக்கு சென்று, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த வீராசாமியிடம், அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வீராசாமியை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர்.
Next Story