என் மலர்

  செய்திகள்

  ஆர்.நாகேந்திரன் அமைச்சர் வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.
  X
  ஆர்.நாகேந்திரன் அமைச்சர் வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.

  திருப்பத்தூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக ஆர்.நாகேந்திரன் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக ஆர்.நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் அமைச்சர் வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக ஆர்.நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணியை தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

  இதேபோல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யனை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  பின்னர் ஆர்.நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு முதல் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக நியமனம் செய்த அ.தி.மு.க. தலைமைக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றேன். மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். விரைவில் தலைமை அறிவிக்கும் நாளில் அமைச்சர் வீரமணி தலைமையில் மாவட்ட தொழில் நுட்பப்பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமை கூறும் அனைத்து பணிகளும் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் விரைந்து முடிக்கப்பட்டு மாநிலத்திலேயே திருப்பத்தூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மிக சிறப்பாக செயல்பட உள்ளோம் என்றார்.
  Next Story
  ×