என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்- பெண் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருவையாறு:

    திருவையாறை அடுத்த திருச்சோற்றுத்துறையை சேர்ந்தவர் பெரம்மையன் மகன் அய்யப்பன் (வயது23). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெரம்மையன் அண்ணன் வெங்கடாசலம் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வெங்கடாசலம், அவரது மனைவி வளர்மதி(45), மகன் செந்தில் ஆகிய 3 பேரும் அய்யப்பன் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கினர். 

    இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய வெங்கடாசலம், செந்தில் ஆகிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
    Next Story
    ×