search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜலட்சுமி
    X
    அமைச்சர் ராஜலட்சுமி

    வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபட வேண்டும்- அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு

    வருகிற சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபட என்று அமைச்சர் ராஜலட்சுமி பேசியுள்ளார்.




    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார்.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சுப்பை யாபாண் டியன், வேல்முருகன், வாசு தேவன், நகரசெயலாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரம குருநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நிவாஸ் வரவேற்புரை ஆற்றினார். இதில் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய பாடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா பேசுகையில், எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி புரியும் என்ற ஜெயலலிதாவின் வாக்கின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்து தமிழக மக்களை காப்பாற்றி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்தும், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி தொகுப்புகள், மற்றும் முககவசங்கள், கையுறைகள் வழங்கிய அமைச்சர் ராஜலெட்சுக்கு நன்றியை தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகர பொருளாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா, குருவிகுளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெகதீசன், துணை செயலாளர் கிருஷ்ணசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமநாதன், ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முத்துமணி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சின்னராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அரசு ஓப்பந்ததாரர் சங்கர், ரவிச்சந்திரன், முருகேசன், மணிகண்டன், தங்கம், கவிதா, மகேஸ்வரி, பேச்சியம்மாள், சத்யாபிரியா, கோகிலா, மாரியப்பன், அல்அமீன் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சங்கரன்கோவில் ஒன்றிய பாசறை செயலாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×