என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் கடந்த 2-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் பெண்ணாத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சுந்தர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story