என் மலர்

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    மாத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே ராசிபுரத்தில் தனியார் மின் கம்பங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அவர்களில் உத்தரபிரதேசம் மாநிலம் கவுரா என்ற ஊரை சேர்ந்த ஜமுனாபிரசாத் மகன் ராகேஷ் குமார் (வயது 31) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் தொழிற்சாலையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மின்கம்பங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ராகேஷ் குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று ராகேஷ் குமாரின், உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் திருச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு கொண்டு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள கவுராவிற்கு கொண்டு சென்றனர்.
    Next Story
    ×