என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாத்தா-மாமா உள்பட 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை திருப்பரங்குன்றம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா-மாமா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருமங்கலம்:

  மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது60). இவருக்கு ஒரு மகளும், பாலா (32) என்ற மகனும் உள்ளனர்.

  சில வருடங்களுக்கு முன்பு இவரது மகள் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தையுடன் அந்த பெண் தன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

  சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விசாரித்தபோது தாத்தா கிருஷ்ணன், அவரது மகன் பாலா ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

  இதுகுறித்து அந்த சிறுமி தன் தாயிடம் கூறியபோது அவர் தந்தை, தம்பியை கண்டிக்காமல் வெளியில் சொல்லக்கூடாது என மகளை மிரட்டி உள்ளார். மேலும் மகள் என்றும் பாராமல் காலில் சூடு வைத்ததாக தெரிகிறது.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து 3½ வயதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாத்தா கிருஷ்ணன், மாமா பாலா ஆகியோரையும், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  Next Story
  ×