என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகை அருகே தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

    நாகை அருகே தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த திருமலைராயன்பட்டினம் போலோகம் காலனி தெருவை சேர்ந்தவர் பிளிப்தாஸ் (வயது 60). நேற்று முன்தினம் இவர் செல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைவாணன் என்பவர் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டினார்.

    அப்போது மரத்தின் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பிளிப்தாஸ் வைத்திருந்த அரிவாள் உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி தென்னை மரத்தில் தொங்கினார். உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கும், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×