என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
யானை
வால்பாறையில் ரேசன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
By
மாலை மலர்28 Aug 2020 6:23 PM GMT (Updated: 28 Aug 2020 6:23 PM GMT)

வால்பாறையில் ரேசன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இவை வழக்கமாக கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து செல்லும். பின்னர் ஆகஸ்டு மாத இறுதியில் மீண்டும் வால்பாறைக்கு திரும்பி வரும். கடந்த 2 நாட்களாக கேரளாவில் இருந்து வரும் யானைகள் வால்பாறை அருகே உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வருகின்றன. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு வந்த 3 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளன.பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடை சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது அங்கிருந்த அரிசியை தின்றுவிட்டு, பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கிருந்து சென்ற யானைகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி வகுப்பறையின் கதவு ஜன்னல்களை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
மேலும் இதுகுறித்த தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×