என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
    X
    பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

    குளியல் அறைக்குள் புகுந்த பாம்பு- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

    ஈரோடு அருகே குளியல் அறைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு காலையில் சென்றார். அப்போது அங்கு ஒரு பாம்பு இருப்பதை பார்த்தார். அச்சம் அடைந்த அவர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ராஜா சுட்டிக்காட்டிய பகுதியில் வீரர்கள் பார்த்தபோது ஒரு பெரிய பாம்பு சுருண்டு படுத்து இருந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிப்பதற்கான கருவியை கொண்டு வந்து பாம்பை பிடித்தனர்.

    அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அது கோதுமை நாகம் என்ற வகையை சேர்ந்தது. பிடிபட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள், வனத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தற்போது கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் குளிரான இடத்தை தேடி வரும். வீட்டின் வெளியே குளியல் அறை இருப்பவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதுடன், விஷ ஜந்துகள் உள்ளே புகுந்துவிடாதபடி பாதுகாப்பாக கதவுகளை பூட்டி வைக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என்று தீயணைப்புப்படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.


    Next Story
    ×