என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தற்கொலை
மணப்பாறையில் ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்16 May 2020 1:38 PM GMT (Updated: 16 May 2020 1:38 PM GMT)

மணப்பாறையில் ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
விருதுநகர் மாவட்டம், கே.புதூர் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன்(வயது 39). மாற்றுத்திறனாளியான இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்த காசிநாதன்,நேற்று இரவு வீட்டில் இறந்து கிடப்பதாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வயர் மூலம் காசிநாதன் தூக்குப்போட்டுள்ளதும், வயர் அறுந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வெளியேறி இருந்ததும், தெரியவந்தது. அங்கிருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், மதுரைக்கு தன்னை அவ்வப்போது பணிக்கு அனுப்பும் நிலையில், தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் எப்படி 120 கிலோ மீட்டர் செல்ல முடியும். இதுவே இந்த முடிவுக்கான காரணம், என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் காசிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×