search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை
    X
    குழந்தை

    பிறந்த 5 நாளில் பெண் குழந்தை உயிரிழப்பு- உடலை தோண்டியெடுத்து இன்று பிரேத பரிசோதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சோழவந்தான் அருகே பிறந்த 5 நாளில் பெண் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக, மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவக்குழு உடலை தோண்டியெடுத்து இன்று பிரேத பரிசோதனை செய்கின்றனர்.
    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த தவமணி-சித்ரா தம்பதியர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சித்ரா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 10-ந் தேதி சோழவந்தான் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

    சித்ரா வீடு திரும்பிய நிலையில் பிறந்து 5 நாட்களான குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக காலை 11 மணி அளவில் திடீரென இறந்ததாக தெரிகிறது. எனவே குழந்தையின் உடலை தவமணி குடும்பத்தினர் சோழவந்தானில் உள்ள வைகை ஆற்றங்கரையில் அடக்கம் செய்தனர்.

    தவமணி-சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4-வதும் பெண் குழந்தை என்பதால் ‘சிசு’ மரணம் செய்திருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பாக சோழவந்தான் கிராம நிர்வாக அதிகாரி சமயன் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவக்குழு இன்று சோழவந்தான் வருகிறது. அவர்கள் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்கின்றனர்.

    பிரேத பரிசோதனையின் முடிவில்தான் சிசு கொலை செய்யப்பட்டதா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்ததா? என்பது தெரியவரும்.

    Next Story
    ×