என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161 கோடி நன்கொடை - தமிழக அரசு தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
  சென்னை:

  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

  இப்பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 13-ந் தேதிவரை மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

  இதன் தொடர்ச்சியாக, 14-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிவரை ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரம் வெளியிடப்படுகிறது.

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா நிறுவனம் ரூ.5 கோடி; சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் ரூ.3 கோடி; ஐ.டி.சி எஜூகேஷன் ரூ.2 கோடி; தி சன்மார் குரூப் ஒரு கோடி ரூபாய்; ஆச்சி மசாலா புட்ஸ் நிறுவனம் ரூ.1.10 கோடி;

  தமிழ்நாடு அரசு இ-பேமண்ட் ரூ.97.65 லட்சம்; தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ரூ.77.30 லட்சம்; தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் ரூ.64.75 லட்சம்; கிரிஸ்டி பிரைட்கிராம் நிறுவனம் ரூ.50 லட்சம்;

  மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் தி சுப்ரீம் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் தலா ரூ.31 லட்சம்; தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ரூ.26 லட்சத்து 71 ஆயிரம்; ஸ்ரீவல்லபாச்சார்யா வித்யா சபா சார்பில் அதன் செயலாளர் ரூ.25 லட்சம்;

  ஓ.சி.எப். ஆவடி ரூ.22.44 லட்சம்; ஜெயவர்மா டெக்ஸ்டைல்ஸ் ரூ.15 லட்சம்; நியூ லைப் அசெம்பிளி ஆப் காட் ரூ.10 லட்சம்; எஸ்.ராஜரத்தினம் ரூ.10 லட்சம்.

  கடந்த ஏழு நாட்களில் மட்டும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும்.

  இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் முதல்-அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×