என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நடமாடும் விற்பனை நிலையம் மூலம் விவசாயிகளை தேடி சென்று உரம் வினியோகம்

    ஈரோடு, கோபி பகுதியில் நடமாடும் விற்பனை நிலையம் மூலம் விவசாயிகளை தேடி சென்று உரம் வினியோகம் செய்யப்படுகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு, கோபி பகுதியில் விளை நிலங்களில் உரக்கடைக்காரர்கள் உர மூட்டைகளை கொண்டு சென்று விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

    இதனை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) முருகேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில் விவசாயிகளுக்கு உரம், இடு பெருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்காக அந்தந்த பகுதியில் உள்ள உர வினியோகஸ்தர்கள் வாகனங்களில் தேவையான உரங்களை வயல் வெளிக்கு எடுத்து சென்று வினியோகம் செய்கின்றனர்.

    மாவட்டத்தில் தேவையான அளவு உரம் உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. கோபி பகுதியில் 8 ஆயிரத்து 122 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் 3 உர விற்பனையாளர்கள் கரட்டடிபாளையம், பங்களா புதூர், பா. வெள்ளாள பாளையம், நஞ்ச கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களில் 16 டன் உரங்களை வயல்வெளிகளில் வைத்து விற்பனை செய்துள்ளனர்.

    எனவே உரம் தேவைப்படும் விவசாயிகள், உர உற்பனையாளர் அல்லது வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தால் வயல்வெளிக்கு வந்து வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஈரோடு வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி, கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயானள், வேளாண்மை அதிகாரி (தரக்கட்டுப்பாடு) வைத்தீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×