search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டாலின்
    X
    ஸ்டாலின்

    விராலிமலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா- ஸ்டாலின் பங்கேற்பு

    விராலிமலையில் ஏப்ரல் 4-ந்தேதி மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    விராலிமலை:

    கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக பா.ஜ.க., மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் அக்கட்சியில் இருந்து விலகி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான விராலிமலையில் பா.ஜ.க. மற்றும் மாற்றுக்கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த இணைப்பு விழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க . தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான திடல் விராலிமலை மதுரை நான்கு வழிச்சாலை விராலூர் அருகே சுமார் 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு பந்தல் கால் நடும் பணி நடைபெற்றது. 

    இதில் பி.டி.அரசகுமார், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி (தெற்கு), கே.கே.செல்லபாண்டியன் (வடக்கு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவிதைபித்தன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட இலக் கிய அணி துணை செயலர் பழனியப்பன், ஒன்றிய செயலர் இளங்குமரன் (மேற்கு), சத்தியசீலன் (கிழக்கு), ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி முருகேசன் (பூதகுடி), ஜெயலட்சுமிகுமார் (வடுகபட்டி), எம்.ரவி (விராலிமலை), பாலசுப்பிரமணியன் (தென்னம்பாடி), பழனியாண்டி (விராலூர்), ஆனந்தன் (கொடும்பாளூர்) செல்வி சுப்பிரமணி (மேல பச்சக்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், விராலிமலை நகரசெயலர் சண்முகசுந்தரம், பி.டி.கே. சுரேஷ், பிரபாகர், பிரபு. சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
    Next Story
    ×