search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    5,8-ம் வகுப்பு பொதுதேர்வு அந்தந்த தேர்வு மையங்களில் தான் நடைபெறும்- செங்கோட்டையன்

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    கோபி:

    கோபி பஸ் நிலையத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியால், தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது. வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் அந்தந்த தாலுக்காக்களில் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார். ஜல்லிக்கட்டு குறித்து பாடப் புத்தகங்களில் சேர்ப்பதாக சொல்லவில்லை. சி.டி மூலமாகத்தான் வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதால், அவர் மீது போலீஸ் நிலையங்களில் பலர் புகார் கொடுத்து வருகிறார்கள் என்பது குறித்து கேட்டதற்கு, இது பற்றி நடிகர் ரஜினியைத் தான் கேட்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×