என் மலர்

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கே.கே.நகரில் அரசு அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி கே.கே.நகரில் அரசு அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கே.கே.நகர்:

    திருச்சி கே.கேநகர் அய்யப்ப நகர் நேரு தெரு வைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். பொதுப்பணித் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

    பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி நகைகள், ரூ.55 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கே.கே.நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×