search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளியை சுற்றி சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    அரசு பள்ளியை சுற்றி சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    கறம்பக்குடி அருகே அரசு பள்ளியை சுற்றி சாக்கடை கழிவுகள் - காய்ச்சலால் அவதிப்படும் மாணவர்கள்

    கறம்பக்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியை சுற்றி சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்பதால் காய்ச்சலால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கருமாரி தெருவில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 350 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றி சாக்கடை கழிவுகள் தேங்கி நிற்கின்றன. மேலும் பள்ளி வளாகத்திலேயே சிலர் குப்பை கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் பள்ளியில் துர்நாற்றம் வீசுகிறது.

    மேலும் இந்த சாக்கடை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகி பகல் நேரத்திலேயே மாணவர்களை கடித்து வருகின்றன. இந்த சுகாதார சீர்கேட்டால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். கறம்பக்குடி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளி வளாகத்தை சுற்றியே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பது பெற்றோர்களை அச்சமடைய செய்துள்ளது.

    தற்போது மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பிரச்சினை உள்ளதால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞர் கல்விதுறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ள சாக்கடை கழிவுகளை பள்ளி வளாகத்திலிருந்து அகற்றி மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×