என் மலர்
செய்திகள்

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட லாரிகள் கோரிமேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.
புதுவையில் ஸ்டிரைக்: 600 லாரிகள் ஓடவில்லை
புதுவையில் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக சுமார் ரூ.150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை உயர்த்தி உள்ளது.
இதை மறுபரிசீலனை செய்யக்கோரி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்தில் புதுவை மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
இது குறித்து லாரி உரிமையாளர் சங்க செயலாளர் குமார் கூறும்போது, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுவையில் லாரிகள் இயக்கப்படாது. புதுவையில் சுமார் 600 லாரிகள் இந்த போராட்டத்தால் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் நிறுத்தம் காரணமாக புதுவையில் சுமார் ரூ.150 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






