என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பலி

    ஆற்காடு அருகே மாடியில் துணி காய போட்டபோது இம்பு கம்பியில் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாழைப்பந்தல்:

    ஆற்காடு அடுத்த வாழப்பந்தல் மேல் புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (வயது 33). தம்பதிக்கு காவியா (10), சந்தியா (7), சோனியா (3) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களது வீட்டு மொட்டை மாடியில் உள்ள இணைப்பு கம்பியில் துணி காயப் போடுவதற்காக இரும்பு கம்பி கட்டி வைத்துள்ளனர். மழை காரணமாக இந்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மங்கையர்கரசி துணிகளை துவைத்து மாடிக்கு சென்று கம்பியில் துணிகளை காயப்போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த வாழைப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மொட்டை மாடியில் துணி காயப்போடும் போது மின்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×