என் மலர்
செய்திகள்

கைது
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ஈரோட்டில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு ஜீவா நகர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் முத்து (வயது 24). இவர் வைராபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் லாரி பாடி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் கடந்த 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்து பெண்ணின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
Next Story






