என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    12 வருடமாக என்னை காதலித்து ஏமாற்றி விட்டார் - அரசு அதிகாரி மீது பெண் புகார்

    ஈரோடு அருகே 12 வருடமாக காதலித்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக அரசு அதிகாரி மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த தேவனாம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் தனது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என 100 பேருடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு வந்தார்.

    பின்னர் அந்தப் பெண் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்தார் .

    நானும் எனது பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 12 வருடங்களாக காதலித்து வருகிறோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் நெருங்கி பழகி வந்தார்.

    இந்நிலையில் அவருக்கு அரசு வேலை கிடைத்தது. இதையடுத்து அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது வீட்டார் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து அவரிடம் கேட்டால் நான் அரசு உத்தியோகத்தில் உள்ளேன். இதெல்லாம் நீ கண்டுக்க கூடாது என்று கூறிவிட்டார். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இளம்பெண் ஒருவர் அரசு அதிகாரி மீது புகார் கொடுக்க இரவில் 100 பேருடன் எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×