என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்18 July 2019 9:38 AM GMT (Updated: 18 July 2019 9:38 AM GMT)
காரைக்குடியில் இன்று ரெயில் மோதி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இறந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ஜங்சன் அருகே திடீரென 40 வயது மதிக்கத்தக்க பெண் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து போலீசார் இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலைய தண்டவாள பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் முதியவர் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×