என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி அடித்து கொலை- பாலியல் பலாத்காரமா?

திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் ‘ஹாலோ பிளாக்’ தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அமீத் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் ஈசானி ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மதியம் தொழிற்சாலையின் வெளியில் விளையாடச் சென்ற ஈசானி திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள முட்புதரில் சிறுமி ஈசானி இறந்து கிடந்தார். அவளது உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. அவளை மர்ம நபர்கள் அடித்து கொன்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சிறுமியை நேற்று மதியம் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 2 தொழிலாளர்கள் வெளியே அழைத்து சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்று தெரிகிறது.
சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.