என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கோவில் திருவிழாவில் மோதல்: முதியவர் வெட்டிக்கொலை

மதுரை:
மதுரை இளமனூர் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் காஞ்சிவனம் (வயது 55). இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் அய்யனார் கோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை தருவது என்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிவனம் நேற்று இரவு மனைவி தனலட்சுமியுடன் வெளியே செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் காஞ்சிவனம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அப்போது மர்ம நபர்களை தடுக்க வந்த காஞ்சிவனம் மகள் தங்கம் என்பவருக்கும் உருட்டுக்கட்டை அடி விழுந்தது. இது தொடர்பாக தனலட்சுமி சிலைமான் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து காஞ்சிவனத்தை வெட்டிக்கொன்றதாக இளமனூர் வக்கீல் கருப்பசாமி, சின்னு, தெய்வேந்திரன், பாலமுருகன், வெள்ளை சாமி, இளங்கோவன், ஈஸ்வரன், கருப்புசாமி, அய்யாக்கண்ணு, மருது பாண்டியன் ஆகிய 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.