என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் அருகே பஸ் மோதி முதியவர் பலி
  X

  திருவள்ளூர் அருகே பஸ் மோதி முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 88). தொழிலாளி.

  இன்று காலை அவர் அதே பகுதியில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்ற முருகேசன் மீது மோதியது.

  இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த போது டிரைவர் திடீர் பிரோக் போட்டதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

  பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×