search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குரும்பூர் அருகே மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
    X

    குரும்பூர் அருகே மது குடித்ததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

    குரும்பூர் அருகே மது குடித்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே அம்பலபிறப்பு பகுதியை சேர்ந்தவர் பழையகாரன். இவரது மகன் வனச்செல்வன்(வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாய் இறந்துவிட்டார். இதனால் அவர் தந்தை மற்றும் சகோதரருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். 

    வனச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் பழையகாரன் மகனை கண்டித்தார். பின்பு அவர் ஆடு மேய்க்க சென்றுவிட்டார். தந்தை திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான வனச்செல்வன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மாலை 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டுக்கொண்டார். சற்றுநேரத்தில் வீடு  திரும்பிய வனசெல்வனின்  சகோதரர் வனச்செல்வன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தர்.  

    உடனடியாக அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் வனச்செல்வனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×