search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் தமாகா கூட்டணி தொடரும்- ஜி.கே.வாசன்

    உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. தொடரும் என்று நாகர்கோவிலில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TamilMaanilacongress #GKVasan #ADMK #CivicPolls
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் ஜனநாயக கடமை ஆற்ற உரிமை உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    ஒரே இடத்தில் பலரது பெயர்கள் விடுபட்டதை த.மா.கா. ஏற்கவில்லை. இதுபற்றியும் விசாரிக்க வேண்டும். இந்த பிரச்சனையை அரசியலாக்க கூடாது.

    மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிகாரி ஒருவர் சென்று வந்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு எதிர் கட்சிகளே காரணம். இப்போது உள்ளாட்சி தேர்தலை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. தொடரும்.

    ரஜினிகாந்த் இன்னும் 100 சதவீதம் அரசியலுக்கு வரவில்லை. எனவே அவருடன் கூட்டணி அமையுமா? என்பது பற்றி இப்போது கூற முடியாது.


    கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? என்பது ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தெரிந்து விடும்.

    மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் 39 பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்தேன். அப்போது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் எங்கள் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்.

    வட இந்தியாவிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. அவர்களின் தேர்தல் அறிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரம் காங்கிரசின் தேர்தல் அறிக்கை செயற்கை தனமாக உள்ளது. எனவே அதனை மக்கள் ஏற்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும். மக்களின் குறைபாடுகளை எந்த கட்சியாலும் 100 சதவீதம் தீர்க்க முடியாது. ஆனால் இப்போது ஆட்சி செய்தவர்கள் மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். அந்த பணிகள் காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு பெருகி உள்ளது. அவர் அமோக வெற்றி பெறுவார்.

    பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

    குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்றி பூங்கா அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், நிர்வாகிகள் ராஜமகாலிங்கம், டாக்டர் சிவக்குமார், சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #TamilMaanilacongress #GKVasan #ADMK #CivicPolls

    Next Story
    ×