என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அறந்தாங்கியில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை
Byமாலை மலர்24 April 2019 10:33 PM IST (Updated: 24 April 2019 10:33 PM IST)
அறந்தாங்கியில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி கணபதி நகரை சேர்ந்தவர் லெட்சுமிபதி. இவரது மகன் முருகேசன் (வயது 35). இவர் காரைக்குடி சாலையில் வாகனங்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடை வைத்து இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முருகேசனை காணவில்லை. இந் நிலையில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் பனங்குடி காட்டு பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்தது கணபதிநகரை சேர்ந்த முருகேசன் என்பதும், அவரை மர்மநபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும், முகத்தை சிதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் மார்சலை வரவழைத்தனர். பின்னர் மோப்பநாய் மார்சல், முருகேசன் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து, அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்று ஒரு செல்போனை கவ்வி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×