என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே  விபத்து - தனியார் நிறுவன ஊழியர் பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே விபத்து - தனியார் நிறுவன ஊழியர் பலி

    ஊத்துக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (38). இவர் பெரியபாளையம் அடுத்து உள்ள மஞ்சாங்காரணையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். லட்சிவாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ஜானகிராமன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    Next Story
    ×