என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 யானைகள்
    X

    புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 யானைகள்

    புஞ்சை புளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 யானைகளை பார்த்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதையொட்டி வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் வன விலங்குகள் இரை தேடியும் தண்ணீர் தேடியும் காட்டை விட்டு வெளியேற தொடங்கி விட்டன.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலி பாளையம் ஊருக்குள் புகுந்தது. இதையொட்டி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    பொதுமக்களுடன் வனத்துறையினரும் சேர்ந்து ஊருக்குள் புகுந்த யானையை விரட்டினர். ஆனால் அந்த யானைகள் நல்லூர் ஓடக்காடு பகுதியில் உள்ள பருத்தி காட்டில் உள்ள முள் காட்டில் பதுங்கியது. தொடர்ந்து யானைகளை விரட்டும் பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×