என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே சொத்து தகராறில் டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் கைது
    X

    செய்யாறு அருகே சொத்து தகராறில் டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் கைது

    செய்யாறு அருகே சொத்து தகராறில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செய்யாறு:

    சென்னை எண்ணூரை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் சரவணன் (வயது 50). டிரைவர். இவர்களுக்கு சொந்தமாக காஞ்சிபுரத்தில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை ஞானவேல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவருக்கு விற்று உள்ளார்.

    இந்நிலையில் சரவணன் அந்த நிலம் எங்களது பூர்வீக நிலம். எனது பாட்டி அந்த நிலத்தை யாருக்கும் விற்க கூடாது என்று உயில் எழுதி உள்ளார். எனவே அந்த நிலத்தை விற்றது செல்லாது என்று செய்யாறு கோர்ட்டில் சுந்தரேசனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கு விசாரணை நேற்று செய்யாறு கோர்ட்டில் நடந்தது. அதற்காக சரவணன் அவரது தாய் பவுனம்மாள் மற்றும் அவரது தங்கை சாந்தி ஆகியோர் வந்தனர்.

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர் வெம்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    பாப்பந்தாங்கல் என்ற இடத்தில் பஸ் சென்ற போது 8 பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழிமறித்து டிரைவர் சரவணனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து டிரைவர் சரவணன் மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரேசன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×