என் மலர்

    செய்திகள்

    நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி இந்துமதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அருண் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்துமதியை பார்ப்பதற்காக அவரது தாயார் செல்வி வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் செல்வி, மகள் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவரது கணவர் மற்றும் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. ஜவகர், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஆறுகாணி கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மகன் சரத் (வயது 18). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் அவர், மேல்படிப்பிற்கு பணம் இல்லை என சரத் கூறி வருத்தப்பட்டு வந்தார். நேற்று உறவினர் வீட்டில் படுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆறுகாணி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×