என் மலர்

  செய்திகள்

  பாகூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை
  X

  பாகூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  பாகூர்:

  பாகூர் தாமரைக்குளம் வீதியை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் மாரியப்பன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 தங்கைகள் உள்ளனர். இதில் மூத்த தங்கைக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.

  சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மாரியப்பன் தனது பெற்றோரிடம் முதலில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்தார். அதற்கு பெற்றோர் மூத்த தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு பிறகு திருமணம் செய்து வைப்பதாக மாரியப்பனை சமாதானப்படுத்தினர்.

  ஆனால், இதனை ஏற்று கொள்ளாத மாரியப்பன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் எலி மருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

  மறுநாள் காலையில் மாரியப்பன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்ததை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மாரியப்பன் பரிதாபமாக இறந்து போனார்.

  இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×