என் மலர்

  செய்திகள்

  ஒரத்தநாட்டில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து கணவர் தற்கொலை
  X

  ஒரத்தநாட்டில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து கணவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரத்தநாட்டில் குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒரத்தநாடு:

  நாகையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). கார் டிரைவர். இவரது மனைவி துர்கா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

  இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பிரகாசிடம் கோபித்து கொண்டு துர்கா தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தெற்கு மடவளாகத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பிரகாஷ் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே துர்க்காவை சமாதானபடுத்தி வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார்.

  அதன்படி ஒரத்தநாட்டுக்கு சென்று அவர் இனி நமக்குள் எந்த வித சண்டையும் வராது. நம் வீட்டுக்கு செல்லலாம். என் கூட வா என்று துர்காவை அழைத்தார். ஆனால் அவர் மறுத்தார். இதனால் மனமுடைந்த பிரகாஷ் அங்கேயே மனைவி கண்முன்னே திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மாமனார் உடனடியாக பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. சுரேசும் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×