என் மலர்
செய்திகள்

ராமாபுரம் அருகே முதியவர் தற்கொலை
ராமாபுரம் அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமாபுரம் நடேசன் நகரை சேர்ந்தவர் கணேசன் (73). கால் ஊனமுற்ற இவர் தனது தம்பியுடன் வாழ்ந்து வந்தார். இவரை, அவருடைய தம்பி மனைவி கோபத்தில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் நேற்று இரவு ஆட்டோவில் கத்திப்பாரா சுரங்கப்பாதை பகுதிக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் ஒரு பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, ஏட்டு மலையரசன் ஆகியோர், கணேசன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று காலை கணேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






