search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுடன் கொங்கு மக்கள் கட்சி கூட்டணி- ஈஸ்வரன் பேட்டி
    X

    தி.மு.க.வுடன் கொங்கு மக்கள் கட்சி கூட்டணி- ஈஸ்வரன் பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கொங்கு மக்கள் கட்சி கூட்டணி பற்றி பேசி வருகிறது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #kongumakkalkatchi #dmk #parliamentelection

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மம் பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவின் முதல்கட்ட பேச்சு வார்த்தை முடிந்தது. 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்னும் 2 நாட்களில் பேசப்பட்டு நல்ல தகவல் தெரிவிக்கப்படும்.

    தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு- பகல் பாராமல் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்.

    தற்போது அ.தி. மு.க-பா.ம.க. இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அ.தி.மு.க. வின் வாக்குகளை டி.டி.வி. தினகரன் பிரிப்பார்.


    கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் 7 தொகுதிகளில் நின்று போட்டியிட்ட பா.ம.க. தோல்வியை தழுவியது. அதுபோல இந்த முறையும் பா.ம.க. தோல்வியை தழுவும். இந்த கூட்டணி குறித்து பா.ம.க-அ.தி.மு.க.வின் தொண்டர்களிடையே சலசலப்பு இருந்து வருகிறது.

    ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் வழங்கும் நிதி திட்டங்களை கடந்த 3 வருடங்களுக்கு முன்பே மத்திய - மாநில அரசுகள் வழங்கி இருந்தால் அது நல்ல ஆட்சி என்று கூறலாம். ஆனால் இப்போது தேர்தலையொட்டி வழங்குவது மக்கள் விரோதத்தைதான் சம்பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத் தலைவர் பிரபாகரன், துணை பொதுச் செயலாளர் சக்தி நடராஜ், தங்கவேல், பொருளாளர் கே.சி. பாலு, மாநில நிர்வாகிகள் சூரியமூர்த்தி, விஷா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #kongumakkalkatchi #dmk #parliamentelection

    Next Story
    ×