என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி மோதி பலி
    X

    செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி மோதி பலி

    செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (24). தனியார் குடோன் சூப்பர்வைசர்.

    இன்று காலை 10 மணி அளவில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர்- செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் ஆலமரம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கீழே விழுந்த சதீஷ் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    விபத்துக்கு காரணமான லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.

    தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×