என் மலர்

  செய்திகள்

  இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது - செங்கோட்டையன்
  X

  இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது - செங்கோட்டையன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

  கோபி:

  கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  காசிபாளையம் பேரூராட்சியில் 300 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடை பெறுகிறது.

  கோபி குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதானால் நாள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

  கோபி நகராட்சி மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை அகற்றவேண்டும் என நீண்டநாட்களாக புகார் வந்துள்ளது. இதற்காக ரூ.62.20 லட்சம் செலவில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்.

  பள்ளி கல்வித்துறை சார்பில் 1.50 கோடி மரக் கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டம் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

  8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகித பங்குத் தொகையுடன் மத்திய அரசு ஸ்மார்ட் மடிக்கனிணிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

  இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  கேள்வித்தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குறிய மதிப் பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

  இன்னும் ஓராண்டிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

  Next Story
  ×