என் மலர்
செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: அதிமுகவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை உள்பட 1737 பேர் விருப்பமனு
அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #MinisterVijayaBhaskar
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கட்சி 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனு வாங்கி வந்தது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.
மொத்தம் 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அத்துடன் கரூர் தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தந்தை சின்னதம்பி விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். #ADMK #MinisterVijayaBhaskar
Next Story






