என் மலர்

  செய்திகள்

  கத்திக்குத்து காயத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன்.
  X
  கத்திக்குத்து காயத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன்.

  மதுரை அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 55). இவர், சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

  அதன் அடிப்படையில் ஏட்டு ஆனந்தனுடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ரோந்து பணிக்குச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் சின்னக்கட்டளை பகுதியில் சென்றனர்.

  அப்போது அங்கு 2 பேர் போர்வையால் உடலை மூடியபடி நிற்பதை பார்த்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரையும் தனித்தனியாக சப்-இன்ஸ்பெக்டர் மாயன் விசாரித்தார்.

  அந்த நேரத்தில் ஒருவன் திடீரென மாயனின் கழுத்தில் கத்தியால் குத்தினான். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

  கத்திக்குத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாயன், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×