என் மலர்
செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு - மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsStalin
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsStalin
Next Story






