என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே கோவிலில் 12 பவுன் நகை - உண்டியல் பணம் கொள்ளை
    X

    திருப்பத்தூர் அருகே கோவிலில் 12 பவுன் நகை - உண்டியல் பணம் கொள்ளை

    திருப்பத்தூர் அருகே கோவிலில் நகை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை ஊராட்சியில் உள்ள நாராயணபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி கோவில் அமைத்துள்ளது.

    இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

    இதேபோன்று பெண்கள் மற்றும் ஆண்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இந்த கோவிலில் இருந்து மேல்மருத்துவருக்கு சென்று வருவார்கள். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு பெண் பக்தர்கள் வந்தனர்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், உண்டியலில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே கோவில் அருகே திரண்டனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 12 பவுன் நகைகளையும், கடந்த சில மாதங்களாக திறக்கப்பட்டதால் உண்டியலில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும், கோவிலின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில வீடுகளில் ஆடுகளையும், கோழிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×