என் மலர்

  செய்திகள்

  பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு
  X

  பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புலிவலம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பேசிய முக ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார். #mkstalin #pmmodi #dmk

  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் உரையாடி பேசினார்.

  தலைவரை ஈன்றெடுத்த திருவாரூர் தொகுதியில் நான் என் பரப்புரையைத் தொடங்குகிறேன். மேலும் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மற்றும் பெரியார் பிறந்த ஈரோடு ஆகிய இடங்களில் பரப்புரை தொடங்கப்படுகிறது. பிப்ரவரி 17-ந் தேதி வரை இந்தப் பயணம் தொடரவிருக்கிறது. இந்த புலிவலம் கிராம சபை மூலமாக உங்கள் பிரச்னைகளை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது.

  இங்கு வந்ததால், ஒரு கோவிலுக்கு வந்த உணர்வு எனக்கு கிடைக்கிறது. கோவில் என்றால் கடவுள் உள்ள கோவில் அல்ல. கிராமம் என்பதை மகாத்மா காந்தி கூறுவார்.

  தலைவர் இல்லை என்பது குறையாக இருந்தாலும் அவர் நாம் அனைவர் ரூபத்திலும் இருக்கிறார். இடைத்தேர்தலில் கண்டிப்பாக நாம் தான் வெல்வோம். 20 தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் தமிழகத்துக்கு என்னென்ன கஷ்டங்கள் வந்தது என உங்களுக்குத் தெரியும். மோடி ஆட்சிக்கு கொடி பிடிக்கும் ஆட்சிதான் எடப்படி பழனிசாமியின் அதிமுக ஆட்சி.

  பண்டைய காலத்தில் கிராம சபை கூட்டம் குடவோலை முறையில் நடந்தது. அதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். குட ஓலை தேர்வு முறைக்கான அடையாளம் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும் கலைஞர் பிறந்த தஞ்சையிலும்தான் இன்னமும் உள்ளது.

  காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் நடத்த இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. திருவாரூர் தேர்தல் மூலம் மோடி பல்ஸ் பார்க்க நினைத்தார்.


  234 தொகுதிகளில் 12,516 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

  பிரதமர் மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளார். ஒவ்வொரு வருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என்று அவர் பொய் வாக்குறுதி அளித்தார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களாகிய நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். மோடி , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுயநலத்துக்காக ஆட்சி நடத்துகிறார். நானும் ஒரு விவசாயி தான் என்று சொல்லும் அவர் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறார். 8 வழிச்சாலை திட்டமே இதற்கு உதாரணமாகும்.

  நாங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இல்லை என்றாலும் எப்போதுமே மக்கள் நலன் சார்ந்தே இருப்போம். உங்களின் குறைகளை கேட்பதற்காக இன்று இங்கு வந்துள்ளேன். திருவாரூருக்கு நானும் பூண்டி கலைவாணனும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான். இந்த தொகுதிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

  கஜா புயல் பாதித்த போது உடனடியாக தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கினோம். நிவாரண பொருட்களை நேரில் சென்று கொடுத்து ஆறுதல் கூறினோம். ஆனால் அ.தி.மு.க. அரசு முழுமையான அளவில் நிவாரணம் வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இருப்பதாக நினைத்து கொண்டு நீங்கள் உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறியுள்ளீர்கள். மீண்டும் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும் என்று எங்களை விட நீங்கள் தான் அதிக நம்பிக்கை வைத்துள்ளீர்கள், உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் திகழ்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #pmmodi #dmk

  Next Story
  ×