search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளராக காமராஜ் அறிவிப்பு
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக வேட்பாளராக காமராஜ் அறிவிப்பு

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ThiruvarurByElection #TTVDhinakaran #Kamaraj
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளுக்கு விடை தருவதாக அமையும். குறிப்பாக தேர்தல் கூட்டணிக்கு திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., தினகரன் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



    இக்கூட்டத்தில் பங்கேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜ் அ.ம.மு.க.வின்  திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

    காமராஜ் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டவர்.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஜன.8-ம் தேதி காமராஜ் வேட்புமனு தாக்கல் செய்கிறார். #ThiruvarurByElection #TTVDhinakaran #Kamaraj
    Next Story
    ×