search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்: அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. அலுவலகத்தில் விருப்ப மனு பெற தொண்டர்கள் குவிந்தனர். #ThiruvarurByElection #DMK #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் நாளை தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.

    போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அறிவித்து இருந்தன.

    இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் இரு கட்சி அலுவலகத்திலும் இன்று குவிந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் திருவாரூர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட 22 பேர் மனு கொடுத்தனர். நாளை 3-ந்தேதி வரை மனுக்கள் பெறப்படுகின்றன. 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பெறப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் இன்று விண்ணப்ப மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பகல் வரை யாரும் மனுக்களை சமர்ப்பிக்கவில்லை.

    ஆனால் நாளை மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெற்று ஒப்படைப்பதற்கு அவகாசம் உள்ளது. 4-ந்தேதி மாலை 5 மணி அளவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. #ThiruvarurByElection #DMK #ADMK
    Next Story
    ×